NCET

பாதுகாப்புக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, நாடு திரும்ப வேண்டிய நிலையில் நோர்வேயில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு

பாதுகாப்புக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, நாடு திரும்ப வேண்டிய நிலையில் நோர்வேயில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்யும் முகமாக, நோர்வே தமிழர் அவை, ஒரு முகப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தை அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கவுள்ளது. இதற்காக ஒரு வழக்கறிஞரையும் அமர்த்தியுள்ளது.

இந்த நிலமையில் இருக்கும் அனத்துத் தமிழர்களையும் எம்மிடம் பதிவு செய்திட வேண்டுகின்றேம்.

ஒருவர் தனியே வழக்கடுவது என்றாலே ஒரு லட்சம் வரைக்கும் செலவு ஆகுமாம். இப்படிச்செய்வதன் மூலம், அதே செலவில் எல்லா விண்ணப்பங்களையும் மீள்பரிசீலனை செய்யலாம். உதாரணத்துக்கு, நூறுபேர் சேர்ந்தால் ஒருவருக்கு ஆயிரம் குறோணர் மட்டில் தான் செலவாகும்.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Oslo வில் தமிழர் அவை பிரதிநிதி திரு.சிவராசா அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். அவரது தொலைபேசி இலக்கம்: 90109493

உங்களுடைய விபரங்களை எங்களுக்குத் தெரிவிக்க, எமது இணையத்தளத்தில் வெளிவிடப்படும் படிவத்தை நிரப்பி அவையின் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். எல்லோரும் தங்களைப் பதிவு செய்வது மிகவும் முக்கியமானது. குறைந்தது நூறு பங்காளிகள் இல்லாமல் நாம் இந்த நடவடிக்கையில் இறங்க முடியாது.



இந்த நிலமையில் இருக்கும் அனத்துத் தமிழர்களையும் எம்மிடம் பதிவு செய்திட வேண்டுகின்றேம்.

© www.ncet.no