|
ஓஸ்லோ, 15.02.10
ஓஸ்லோ, 04.02.10
நோர்வேத் ஈழத்தமிழர் அவையின் ஏற்பாட்டில் ஸ்ரீ லங்காவின் அறுபத்தி இரண்டாவது சுதந்திரதினம் கரிநாளாக அனுஷ்டிக்கப்பட்டது. ஸ்ரீ லங்காவின் சுதந்திரதினத்தை கரிநாளாகக் கருதி நூற்றுக்கணக்கான நோர்வே வாழ் ஈழத்தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதி நிகழ்வாக நோர்வே வெளிவிவகாரக் குழுவிடம் ஈழத்தமிழர் அவை ஓர் மனுவை கையளித்தது. அம் மனுவில் அடங்கியுள்ள விபரம் பின்வருமாறு.[மேலும்]
பாதுகாப்புக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, நாடு திரும்ப வேண்டிய நிலையில் நோர்வேயில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்யும் முகமாக, நோர்வே தமிழர் அவை, ஒரு முகப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தை அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கவுள்ளது. இதற்காக ஒரு வழக்கறிஞரையும் அமர்த்தியுள்ளது
இந்த நிலமையில் இருக்கும் அனத்துத் தமிழர்களையும் எம்மிடம் பதிவு செய்திட வேண்டுகின்றேம்.
[மேலும்]
பல்வேறு நாடுகளின் தமிழீழ மக்களாணை, மக்களவைத் தேர்தலுக்கான குழுக்களின்
பிரதிநிதிகள் டிசம்பர் மாதம் 26, 27ம் திகதிகளில் செருமனியில் ஒழுங்குபடுத்தப்பட்ட
மாநாடொன்றில் சந்தித்துக் கலந்துரையாடி தொடர்ச்சியான செயற்பாட்டுக்கான
ஒருங்கிணைக்கப்பட்ட முதற்கட்டத் தீர்மானங்களை மேற்கொண்டனர்.[மேலும்]
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் வழக்கு. மலரும் தமிழர் திருநாளாம் தைத் திருநாளில் ஈழத் தமிழ் மக்களின் அரசியல்ää சமூகää பொருளாதார விடுதலைக்கான முன்னெடுப்புக்கள் விரைவுபடுத்தப்பட்டு இனிதாய் நிறைவு காண வாழ்த்தி நிற்கின்றது நோர்வே ஈழத் தமிழர் அவை.
ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ்கின்ற நாடொன்றில் முதன் முறையாக சனநாயக விழுமியங்களுக்கு அமைவான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட ஓர் அமைப்பே நோர்வே ஈழத் தமிழர் அவை.
நோர்வே ஈழத் தமிழர் அவையின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக அவையை தமிழ்நாட்டு மற்றும் உலகத் தமிழர் மத்தியில் அறிமுகப்படுத்தும் செயற்பாடு முடுக்கி விடப்பட்டுள்ளது.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் கட்டமைப்பை கட்டியமைக்கும் பணியும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. நோர்வே ஈழத் தமிழர் அiவையன் உள் கட்டமைப்புக்களும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நோர்வேஜிய தேசியப் பத்திரிகைகளிலும் மற்றும் தமிழ்நாட்டு அரசியில் அமைப்புக்கள் மத்தியிலும் நோர்வே ஈழத் தமிழர் அவை பற்றிய விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தாயகத்தின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமான அனைத்து ஒடுக்கு முறைகளுக்குமான விடுதலைக்கு முழு மூச்சுடன் பாடுபடும் என தமிழர் திருநாளாம் தை நாளில் நோர்வே ஈழத் தமிழர் அவை உறுதி பூணுகின்றது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்கள் சமாதானத்திற்கான நோபல் பரிசை பெற்றுக் கொள்வதற்காக கடந்த வியாழன்று(10.12.09) நோர்வேக்கு சமூகமளித்திருந்த போதே இவ்வேண்டுகோள் நோர்வே தமிழ்ஈழ மக்கள் அவையால் விடுக்கப்பட்டிருந்தது. அமெரிக்க அதிபருக்கும் மற்றும் ஊடகங்களுக்கும் விடுக்கப்பட்ட அறிக்கையிலே இக் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. [மேலும்]
|