|
|
||
நோர்வேயில் கவனயீர்ப்பு போராட்டம் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு.ஓஸ்லோ, 04.02.10 நோர்வேத் ஈழத்தமிழர் அவையின் ஏற்பாட்டில் ஸ்ரீ லங்காவின் அறுபத்தி இரண்டாவது சுதந்திரதினம் கரிநாளாக அனுஷ்டிக்கப்பட்டது. ஸ்ரீ லங்காவின் சுதந்திரதினத்தை கரிநாளாகக் கருதி நூற்றுக்கணக்கான நோர்வே வாழ் ஈழத்தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
ஸ்ரீ லங்காவில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மனிதப்படுகொலையை நிறுத்துவதற்கு நோர்வே காத்திரமான நடடிவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என கோரப்பட்டுள்ளதோடு, தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் மீது நோர்வே கவனம் செலுத்தும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்திருப்பது போல காட்டப்படுகிறபோதும், ஈழத்தமிழ் மக்களின் நிலைமையானது முன்னைய நிலைகளை விட மோசமடைந்திருக்கின்றது. ஒரு இலட்சததிற்கும் அதிகமான மக்கள் இற்றைவரை இடைத்தங்கல் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்ளக இடப்பபெயர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தமிழ்மக்களின் பாராம்பரிய நிலங்கள், சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதோடு, அப்பிரதேசங்களில் மக்களை மீள் குடியேற்றப்படுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அதேவேளை சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதேசங்களில் புத்த விகாரைகள் அமைக்கப்படுவதோடு, சிங்கள குடியேற்றங்களும் மேற்கொள்ளப்படுகின்றது. இந்நடவடிக்கையானது கிழக்கு இஸ்ரேலில் யூதக்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தை ஞாபகப்படுத்துகின்றது. நிரந்தர மக்கள் நீதிமன்றத்தால் ஸ்ரீ லங்காவின் போர்க்குற்றங்கள் பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, ஸ்ரீ லங்கா அரசு போர்க்குற்றங்களை மேற்கொண்டிருக்கிறது என அந்நீதிமன்றக் குழு தீர்ப்பையும் அளித்துள்ளது. இத்தீர்ப்பை அனைத்துல சமூகம் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும், யுத்தக் குற்றச் செயலானது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். ஸ்ரீ லங்காவில் வாழும் தமிழ்மக்கள் ஓர் புறம்பான தேசிய இனம் என்பதோடு, அவர்களுக்கென்று கலாச்சாரம், மொழி, மற்றும் அடையாயத்தைக் கொண்டவர்கள். நாம் எமது உரிமைப் போராட்டத்தை கடந்த 60 வருட காலத்திற்கு மேலாக மேற்கொண்டு வருகின்றோம். ஸ்ரீ லங்கா அரசு தனது மேலாதிக்கத்தை பயன்படுத்தி தமிழ் மக்களை இரண்டாம் குடிகளாக பாகுபாடகவே நடத்தி வருகின்றது. ஸ்ரீ லங்காவின் பூர்வக் குடிகளாகிய தமிழ் மக்கள் கடுமையான அடக்கு முறைக்கு தொடர்ச்சியாக உள்ளாக்கப்படுகின்றனர். அந்தவகையில் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமேயானால்ää தமிழ் ஈழமே ஒரே ஒரு தீர்வாக அமையும். 2009ம் ஆண்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் ஊடாக நோர்வே வாழ் 99 விழுக்காடு மக்கள் தமிழ் ஈழமே, தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு ஓர் சரியான தீர்வு என வாக்களித்;திருந்தனர். இவ் வாக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டே அதேவருடம் நவம்பர் மாதம் ஈழ மக்கள் அவை மக்கள் தெரிவில் உருவாக்கப்பட்டது. ஈழ மக்கள் அவையானது தமிழ் ஈழமே தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வாக கருதி அதற்காக போராடும் ஓர் அமைப்பு. அதேவேளை நோர்வே மக்களுடனான இணைவாக்கத்திற்கும் ஈழ மக்கள் அவை உழைப்பதோடு, தமிழ் மக்களின் அடையளாம், கலாச்சாரம், மொழியையயும் பாதுகாக்கவும் உழைக்கும். எமது நிலைப்பாட்டை அடிப்படையாக் கொண்டு செயற்படும் ஏனைய நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து ஈழத்தமிழர் அவை செயற்படும். இவ்வாறாக நோர்வே ஈழத்தமிழர் அவையின் மனுவிலே குறிப்பிடப்பட்டுள்ளது. |
||
|