|
|
||
நோர்வே தமிழீழ நிறுவனங்களின் தெரிவவைத் தேர்தல்தேர்தல் திகதியும் வேட்புமனுத் தாக்கலும்08.11.2009 அன்று நோர்வே தமிழீழ நிறுவனங்களின் தெரிவவைத் தேர்தலை நடத்துவதென, இவ்வமைப்பின் தேர்தற்பணிகளை முன்னெடுத்துவரும் சுயாதீனத் தேர்தற்குழுவானது தீர்மானித்துள்ளது. இவ்வமைப்பின் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் 05.11.2009ஆம் திகதிக்கு முன் விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்திசெய்து அனுப்பப்பட்டிருக்க வேண்டும். நோர்வே - தமிழீழ நிறுவனங்களின் தெரிவவைத் தேர்தலில் பங்குபற்ற விரும்பும் நிறுவனங்கள் நோர்வே ஈழ நிறுவனங்கள் சபைக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதில் பங்கு பற்றத் தகுதியான நிறுவனங்கள் 05.11.2009ஆம் திகதிக்கு முன் விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பிவைத்திருக்க வேண்டும்.
தங்கள் நிறுவனம் யாப்பில் கூறப்பட்ட தகைமைகளைக் கொண்டுள்ளதா என்பதைத் தீர்மானித்து நிறுவனங்களுடன் தொடர்புகளைப் பேணி இறுதி முடிவு எடுக்கப்படும். பின்வரும் தகைமையைக் கொண்ட அமைப்புக்கள் வாக்களிக்கத் தகுதி கொண்டவையாகும்:
|
||
|